இந்திய செய்திகள்

இந்தியாவின் UPI உடன் இணைகிறது சிங்கப்பூர் PAY Now- இந்தியாவிற்கு இனி எளிதில் பணம் அனுப்பலாம்!

சிங்கப்பூர் இந்தியா இடையே டிஜிட்டல் பண பரிவர்த்தன முறை இன்று முதல் துவங்க இருக்கிறது. இதற்கான துவக்கத்தினை சிங்கப்பூர் பிரதமர் மற்றும் இந்திய பிரதமர் காணொளி காட்சி மூலம் இன்று துவைக்கி வைக்கின்றனர் .

இந்தியாவின் முக்கிய டிஜிட்டல் பண பரிவர்த்தனை தளமான UPI மற்றும் சிங்கப்பூரின் முக்கிய டிஜிட்டல் பண பரிவர்த்தனை தளமான PAY NOW இன்று முதல் இணைகிறது.

உலக அளவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகம் நடைபெறும் நாடுகளில் இந்தியா தற்போது முதல் இடத்தில் உள்ளது. அதாவது ரொக்கம் இல்லா பண பரிமாற்ற சேவையை அதிகம் இந்தியர்கள் பயன்படுத்தி வருவதாக புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கிறது .

சிங்கப்பூரின் PAY NOW பண பரிவர்த்தனை தளத்துடன் இந்தியாவின் UPI இணைவதால் இந்தியாவிற்கான பண பரிமாற்றம் இனி மிக எளிதில் நடைபெறும். இதனால் சிங்கப்பூரில் வாழும் இந்தியர்கள் தற்போது மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .

இந்தியா சிங்கப்பூரிடையே டிஜிட்டல் பண பரிவர்த்தன முறையை இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் சிங்கப்பூர் பிரதமர் திரு.லீ சியென் லுங் ஆகியோர் காணொளி காட்சி மூலம் இன்று துவைக்கி வைக்கின்றனர் .

Related Posts