இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருக்கோவிலுக்கு வருகை தர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அக்டோபர் 30ஆம் தேதி தமிழகம் வருகை தரும் பிரதமர் எந்தெந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் என்ற விரிவான தகவல் விரைவில் வெளியிட வாய்ப்புகள் உள்ளன.
தமிழக பாஜக சார்பில் ஏற்கனவே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் முதன்முறையாக பசும்பொன் கிராமத்திற்கு வருகை தர உள்ளதால் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்துவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெறுவும் வாய்ப்பு.
அக்டோபர் 30-ஆம் தேதி தமிழக முதல்வர் உட்பட பல்வேறு தலைவர்கள் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருக்கோவில் குருபூஜை விழாவில் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
இந்திய பிரதமர் அக்டோபர் 30ஆம் தேதி தமிழகம் வருகை தருவதற்கான எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும். இதுவரை மத்திய அரசிடமிருந்து வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது .