சிங்கப்பூரின் முக்கிய வர்த்தக பகுதியாக கருதப்படும் தேக்கா லிட்டில் இந்தியா பகுதிகளில் மிக பிரம்மாண்டமாக அமைந்திருக்கும் சில்லறை வர்த்தக மையம் தான் முஸ்தபா சென்டர்.
குறிப்பாக தமிழர்களுக்கு மிகவும் விருப்பமான கடையாகும் இந்த கடை சிங்கப்பூரிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் அனைத்து தமிழர்களும் இந்த மால் அதாவது முஸ்தபா சென்டர் கடைக்கு சென்று தங்கள் குடும்பத்தினருக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவது வழக்கம். தமிழர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இந்த கடை விரைவில் வெளிநாட்டில் திறக்கப்பட உள்ளது .
முஸ்தபா சென்டர் முதன்முறையாக சிங்கப்பூரை தவிர்த்து வெளி நாடான மலேசியாவின் தம்போய் Tampoi பகுதியில் திறக்கப்பட உள்ளது.
மலேசியாவின் கேப்பிட்டல் சிட்டி மால் கட்டிடத்தில் அமைய உள்ளது புதிய முஸ்தபா சென்டர் கிளை.
மலேசியாவின் ஜொகூர் பாரூ சோதனைச் சாவடியில் இருந்து 15 நிமிடத்தில் நான்கு சக்கர வாகனத்தில் முஸ்தபாவின் புதிய கடையை சென்றடையலாம் .வரும் 2024 ஆண்டில் முஸ்தபாவின் புதிய கடை திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது .