இந்திய பிராண்டுகளான எம்.டி.ஹெச் மற்றும் எவரெஸ்ட் ஆகியவற்றின் நான்கு தயாரிப்புகளை புற்றுநோயை உண்டாக்கும் பொருட்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எவரெஸ்ட் மீன் கறி மசாலாவை சிங்கப்பூர் திரும்பப் பெற்றுள்ளது, இது எத்திலீன் ஆக்சைடு என்ற புற்றுநோயை உண்டாக்கும் பொருட்கள் இருப்பதால் சந்தையில் இருந்து திரும்ப பெறுவதற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது .
ஹாங்காங்கின் உணவு மற்றும் சுற்றுச்சூழல் ஒழுங்குமுறை அமைப்பானது, அதன் வழக்கமான உணவு கண்காணிப்பு திட்டத்தின் கீழ் நான்கு பொருட்களின் மாதிரிகளை சேகரித்து, பூச்சிக்கொல்லி எத்திலீன் ஆக்சைடு இருப்பதைக் கண்டறிந்தது, இது மனித நுகர்வுக்குப் பொருத்தமற்றதாக கருதப்படுகிறது .
மூன்று MDH தயாரிப்புகள் -கறி தூள் (மெட்ராஸ் கறிக்கான மசாலா கலவை), கலப்பு மசாலா தூள் மற்றும் சாம்பார் மசாலா. நான்காவது தயாரிப்பு எவரெஸ்ட் மீன் கறி மசாலா. ஆகியவை அடங்கும்