இந்திய செய்திகள்

திருச்சிக்கு டிசம்பர் மாதம் முதல் புதிய விமான சேவை துவக்கம்.

தமிழகத்தில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் தற்போது அதிக பயணிகளை கையாளும் விமான நிலையங்களில் ஒன்றாக கருதப்படுகிறது திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் .

தற்போது திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் மலேசியா துபாய் போன்ற நாடுகளுக்கு சர்வதேச விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

மேலும் தற்போது ஸ்ரீலங்காவை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பிட்ஸ் ஏர் என்ற நிறுவனம் திருச்சிராப்பள்ளி கொழும்பு இடையே புதிய விமான போக்குவரத்தை டிசம்பர் மாதம் முதல் துவங்க இருக்கிறது.

மேலும் பிட்ஸ் ஏர் விமான நிறுவனம் பல்வேறு நாடுகளுக்கும் விமான சேவையை துவங்க வேண்டும் என்பது விமான பயணிகளின் விருப்பமாக உள்ளது.

Related Posts