இந்திய செய்திகள்

பூங்கொத்து வாத்தியங்கள் முழங்க மாணவர்களை வரவேற்ற பள்ளி நிர்வாகம் !

ஜூன் 14:திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கள்ளிக்குடி கிராமத்தில் செயல்பட்டு வருகிறது பாம் மெட்ரிகுலேஷன் பள்ளி. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான தொடக்கபள்ளி மாணவர்களுக்கான பள்ளிகள் இன்று முதல் துவங்கி உள்ளன.

கோடை விடுமுறை நிறைவடைந்து பள்ளிக்கு மீண்டும் திரும்பும் மாணவர்களை வரவேற்கும் விதமாகவும் புதியதாக சேர்க்கப்பட்ட மாணவர்களை வரவேற்கும் விதமாகவும் மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்தும் பேண்ட் வாத்தியங்கள் முழங்கவும் பள்ளி நிர்வாகத்தினர் மாணவ மாணவிகளை வரவேற்றனர் .

மேலும் LKg மற்றும் UKG மாணவர்களை வரவேற்கும் விதமாக பொம்மை உருவங்களுடன் பேண்டு வாத்தியங்கள் முழங்க சிறார்களும் வரவேற்கப்பட்டனர்.

பள்ளியில் புதிய மாணவர்களை சேர்த்த பெற்றோர்கள் பள்ளி நிர்வாகம் குழந்தைகளை திறம்பட கவனித்துக் கொள்வதாகவும். கனிவுடன் நடந்து கொள்வதாகவும் மாணவர்கள் படிப்பதற்கான அனைத்து ஏற்ற சூழ்நிலைகளுடன் இந்த பள்ளி அமைந்து இருப்பதாகவும் தெரிவித்தனர் .

பள்ளியின் துவக்க நாளான இன்று பள்ளியின் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளியின் நிர்வாகத்தினர் மாணவர்கள் கல்வித் திறனை ஊக்குவிக்கும் வகையில் பேசினர். மேலும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய நிகழ்ச்சி தேசிய கீதத்துடன் நிறைவு பெற்றது. பள்ளி மாணவர்கள் அவர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வகுப்புகளுக்கு சென்றனர்.

Related Posts