தீ விபத்து 260, கிம் கீட் அவென்யூ
நேற்று (ஜூன் 16) இரவு 11.15 மணியளவில், மேற்கூறிய இடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படைக்கு தெரிவிக்கப்பட்டது .
SCDFவந்தவுடன், முதல் மாடியில் மூடப்பட்ட காபி கடையில் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. சுவாசக் கருவி பொருத்தப்பட்ட, பிஷன் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த SCDF தீயணைப்பு வீரர்கள் தீயை அணைப்பதற்காக கடைக்குள் நுழைந்தனர்.
காபி கடைக்குள் இருந்த பல இடங்களில் தீ பரவி இருந்தது , இரண்டு நீர் ஜெட் பயன்படுத்தி SCDF ஆல் தீ அணைக்கப்பட்டது.
தீ விபத்தின் போது காபி கடைக்குள் யாரும் இல்லை. காபி கடைக்கு எதிரே உள்ள ஒரு கடை யூனிட்டை சேர்ந்த 7 பேரை போலீசார் வெளியேற்றினர். காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
தீ விபத்துக்கான காரணம் விசாரணையில் உள்ளது.
Source :SCDF