சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் இந்திய தூதரகத்தின் சார்பில் இன்று காலை 8:30 மணி அளவில் இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது.
தூதரகத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றினார் இந்திய தூதரகத்தின் உயர் அதிகாரி திரு. பெரியசாமி குமரன் அவர்கள் மூவர்ண கொடி ஏற்றப்பட்டு இந்திய ஜனாதிபதியின் உரை வாசிக்கப்பட்டது.
இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் இந்திய தூதரகத்தில் நாட்டுப்பற்றை விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
