பத்தாண்டு கால ஆட்சியில் என்னென்ன திட்டங்களை கொண்டு வந்தோம் என்பதை சொல்வதற்கு ஏதும் இல்லாமல் திமுகவை விமர்சிப்பது தான் பாஜகவின் பரப்பரை பார்முலாவாக இருக்கிறது என தமிழக முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார் .
திமுக தொண்டர்களுக்கு தமிழக முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது.
இது வழக்கமான தேர்தல் அல்ல ஜனநாயக அறப்போர் என்று கூறியுள்ள முதலமைச்சர். இந்தியாவை மீட்பதற்கான அறப்போராட்ட களத்தில் உங்களுடன் இணைந்து நானும் நிற்கிறேன் என்றும் தமிழ்நாடு இழந்த உரிமைகளை மீட்கவும் இந்தியாவில் உள்ள மாநிலங்கல் அனைத்தும் வளம் பெறவும்.இந்திய அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்துகிற கூட்டாட்சி கருத்துகளை காத்திடவும் பாசிச சக்திகளை வீழ்த்திடவும் நாடாளுமன்றத் தேர்தல் எனும் ஜனநாயக களத்தை எதிர்கொள்கிறோம் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார் .
தமிழ்நாடு மீண்டும் உரிமையுடன் திகழ்வதற்காக மட்டுமின்றி இந்தியாவில் உண்மையான ஜனநாயகமும் கூட்டாட்சி கருத்தியல் நிலைபெறவும் கழகத்தின் சார்பில் வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. ஏழை நடுத்தர மக்களை அன்றாடம் பாடுபடுத்தும் சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கட்டுப்படுத்தி 500 ரூபாயாக குறைப்பது பெட்ரோல் டீசல் விலையை குறைப்பது தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகளை முற்றிலுமாக அகற்றுவது உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த வாக்குறுதிகளை வழங்கி இருக்கிறோம் .
தற்போது பாஜகவினரும் இப்போது இந்தியா என்று உச்சரிக்க தயங்குகிறார்கள் என்றால் இதுதான் நாம் கட்டமைத்துள்ள உண்மையான புதிய இந்தியாவின் முதற்கட்ட வெற்றி அந்த வெற்றி தேர்தல் களத்திலும் தொடர்ந்திடும் ஆட்சி மாற்றத்தை உருவாக்கும் .
இதுவரை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்கள் அனைத்தும் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை முடிவு செய்வதற்கான தேர்தல்களாக இருந்தன. இந்த முறை யார் ஆட்சிக்கு வரவே கூடாது என்பதற்கான தேர்தல் களமாக அமைந்துள்ளது இது வெறும் தேர்தல் களமல்ல ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டிய அறப்போர் களம். இந்த போரில் நாம் வென்றாக வேண்டும் ஓயாமல் உழைத்தால் உறுதியான வெற்றி நிச்சயம் 40-ம் நமதே நாடும் நமதே இவ்வாறு முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் கூறியுள்ளார்
செய்தியாளர்: R. ராஜேஷ்குமார்