
ரஜினிகாந்தின் நடிப்பில் ஆகஸ்ட் 10ஆம் தேதி அதாவது இந்த மாதம் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது ஜெயிலர் திரைப்படம். இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் நெல்சன் .

ஜெயிலர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முதல் நாளில் ரசிகர்கள் பட்டாளத்தின் கொண்டாட்டம் அதிகமாக இருக்கும் குறிப்பாக தமிழ்நாட்டில் கட் அவுட்டுகள் வைக்கப்பட்டும் பாலாபிஷேகங்கள் செய்யப்பட்டும் திரைப்படத்தின் கொண்டாட்டங்கள் நடைபெறும் .

சிங்கப்பூரில் இந்த மாதம் 10 ஆம் தேதி வெளியாகயுள்ள ஜெயிலர் திரைப்படத்திற்கான கொண்டாட்டங்களுக்கு தற்போது சிங்கப்பூர் ரஜினி ரசிகர்கள் தயாராகி விட்டனர் .

ஜெயிலர் திரைப்படம் திரையிடப்படும் திரையரங்குகளில் ரஜினியின் கட்டவுட்டுகள் வைக்கப்பட்டு கொண்டாட்டங்களுக்கு தயாராக உள்ளனர்.
இந்த கொண்டாட்டங்களுக்கு மகுடம் சேர்க்கப்படும் வகையில் சிங்கப்பூரில் உள்ள ஆசியாவின் மிக அகன்ற திரை கொண்ட திரைப்பட திரையரங்காக கருதப்படும் GVMAX Vivo City திரையரங்கில் 4வது தமிழ் திரைப்படமாக ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் திரையிடப்படுகிறது. இதற்கு முன்பு இதே திரையரங்கத்தில் தமிழ் திரைப்படங்களான வாரிசு ,துணிவு பொன்னியின் செல்வன் திரைப்படங்கள் திரையிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது .
சிங்கப்பூரில் உள்ள பல திரையரங்குகளில் தற்போது ஜெயிலர் திரைப்படத்திற்கான டிக்கெட்டுகள் விறுவிறு விற்பனையாகியுள்ளன .சில திரையரங்குகளில் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட் முற்றிலும் தீர்ந்து விட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது .