இந்திய செய்திகள்

இந்தியாவின் முதல் ஏர்பஸ் விமானத்தை வாங்கியது ஏர் இந்தியா!

ஏர் இந்தியாவின் முதல் அகலமான உடல் கொண்ட ஏர் பஸ் ஏ350 விமானம் டிசம்பர் 23ஆம் தேதி இந்தியாவின் தலைநகர் டெல்லியில் தரை இறங்கியது.

ஏர் இந்தியா நிறுவனம் அதன் விமான போக்குவரத்து சேவையில் ஏர்பஸ் ஏ350 விமானத்தை இணைக்க முடிவு செய்தது. அதன்படி அந்த ஏர்பஸ் விமானத்தை வாங்கியது ஏர் இந்தியா. இந்தியாவின் முதல் ஏர்பஸ் விமானம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது .

ஏர் பஸ் ஏ350 ஒரு அகலமான உடலை கொண்ட விமானம் ஆகும் இதுவே இந்தியாவின் முதல் அகலமான உடல் அமைப்பை கொண்ட விமானம் ஆகும் இந்திய விமான பிரிவில் இது போன்ற அகலமான உடல் அமைப்பை கொண்ட விமானம் வேறு எந்த நிறுவனத்திடமும் இல்லை என கூறப்படுகிறது.

முதல் கட்டமாக இந்த விமானம் குறைந்த தூர இடைவெளிகளை கொண்ட வழித்தடங்களில் மட்டுமே இயக்கப்பட இருப்பதாக ஏர் இந்தியா தெரிவித்திருக்கிறது இதற்கு பின்னரே நீண்ட தூர வழித்தடங்களில் இந்த விமானம் பயன்படுத்தப்பட இருக்கிறதாகவும் கூறப்பட்டுள்ளது. புதிய விமானத்தை சேவையில் இணைக்க இருப்பதை தொடர்ந்து ஏர் இந்தியா நிறுவனம் அதன் ஊழியர்களுக்கான சீருடை மாற்றி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது .

இந்த விமானத்தில் 300 முதல் 350 பயணிகளால் ஒரே நேரத்தில் பயணிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது அதிக இட வசதி சுகஸ்தான பறக்கும் அனுபவத்தையும் இந்த விமானம் வழங்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

Related Posts