இந்திய செய்திகள்

அவசர தேவைகளுக்கு ஊருக்கு செல்ல முடியாத சூழ்நிலையா? சிங்கப்பூர்- திருச்சி கூடுதல் விமானங்கள் இயக்கப்படுமா ?

சிங்கப்பூர் திருச்சி இடையே கூடுதல் விமானங்களை இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதிகளவில் பயணிகளின் போக்குவரத்து கூடியுள்ளதால் சிங்கப்பூரில் இருந்து திருச்சி செல்வதற்கு விமானத்தில் டிக்கெட்டுகள் கிடைப்பதில்லை என பயணிகள் தெரிவிக்கின்றனர்.

திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு நான்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இருப்பினும் சிங்கப்பூர் திருச்சி இடையே அதிக அளவிலான விமான பயணிகள் பயணிப்பதால் அதிக அளவிலான டிக்கெட் முன்பதிவிலேயே முடிந்து விடுவதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.

வருகின்ற தொடக்க மாதங்களுக்கான டிக்கெட்டுகள் முடிந்து விட்டதாக பயணிகள் தெரிவிக்கும் சூழ்நிலையில் முக்கிய தேவைகளுக்காக சொந்த ஊர்களுக்கு செல்வது தடைபடுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே சிங்கப்பூர் திருச்சிராப்பள்ளி இடையே கூடுதல் விமானங்களை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts