பாஜக மாநில தலைவர் திரு .அண்ணாமலை அவர்கள் மேற்கொண்டு வரும் என் மண் என் மக்கள் நடை பயணத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தில். நேற்று விவசாயிகளை சந்தித்த பாஜக மாநில தலைவர் திரு .அண்ணாமலை அவர்கள் விவசாயிகளுக்கு பாத பூஜை செய்து அவர்களிடம் ஆசீர்வாதம் பெற்றார்.
மீண்டும் வேண்டும் மோடி என்ற நோக்கத்தை கருத்தில் கொண்டு பாஜக மாநில தலைவர் மேற்கொள்ளும் என் மண் என் மக்கள் நடை பயணத்தில் தற்போது அதிக அளவிலான பொதுமக்கள் கலந்து கொண்டு வருகின்றனர். பாஜகவின் வளர்ச்சி தற்போது தமிழகத்தில் அசுர வேகத்தில் இருப்பதாக ஊடவியலாளர்களும் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது .
பிப்ரவரி மாதம் என் மண் என் மக்கள் நடைபயணத்தின் நிறைவு நிகழ்ச்சி விரைவில் நடைபெற இருக்கிறது. இதில் பாஜக தேசிய தலைவர் மற்றும் இந்திய பிரதமர் கலந்து கொள்வார்கள் என பாஜக மாநில தலைவர் திரு .அண்ணாமலை அவர்கள் தெரிவித்துள்ளார்