சினிமா செய்திகள்

ரெபல் திரைப்பட விமர்சனம்!

இசையமைப்பாளராகவும் ஹீரோவாகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார் ஜி வி பிரகாஷ். இவர் நடிப்பில் இன்று திரையரங்கில் வெளிவந்துள்ள திரைப்படம் தான் ரெபல் இப்படத்தை நிகேஷ் என்பவர் இயக்கி உள்ளார். இப்படத்தில் ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து மலையாள திரை உலகின் சென்சேஷன் நடிகை மமீதா பைஜூ நடித்துள்ளார்.

80 ஆம் ஆண்டுகளில் கேரளாவை பின்னணியாக வைத்து மூணாறு தமிழ் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகள் பாலக்காடு கல்லூரியில் போராடும் அவல நிலையை படத்தில் காட்டி உள்ளார் .

கதாநாயகன் ஜிவி. பிரகாஷ் புரட்சிகரமான கல்லூரி மாணவனாக அசத்தியுள்ளார் கதாநாயகி மமீதா பைஜூ அழகாகவும் போதுமான நடிப்பையும் வெளிப்படுத்தி உள்ளார். பாடல்கள் மற்றும் பின்னணி இசை சூப்பர் என்றே சொல்லலாம் .படத்திற்கு மிகப்பெரிய பலம் அருண் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து படத்தை இளைஞர்களை கவரும் வண்ணம் சுவாரசியமாக இயக்கி உள்ளார் இயக்குனர் நிகேஷ்

Related Posts