சினிமா செய்திகள்

விஜயகாந்த் மகனுடன் இணையும் சிவகார்த்திகேயன் படத்தின் இயக்குனர்!

மறைந்த கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் சினிமாவில் தனக்கென்று தனி அடையாளத்தை பெற வேண்டும் என போராடிக் கொண்டிருக்கிறார். விஜயகாந்த் மறைவுக்கு பின் சண்முக பாண்டியன் திரையுலகில் நல்ல இடத்தை பிடிக்க வேண்டும் என பலரும் கூறி வருகின்றனர் .

சண்முக பாண்டியன் அவர்கள் நடிக்கும் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கிறேன் என நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் விஷால் போன்ற நடிகர்கள் கூறியிருந்தனர் .அதேபோல் சண்முக பாண்டியன் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ஒரு திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் கேமியோ ரோலில் நடித்து வருகிறார் .

தற்போது சிவகார்த்திகேயனுக்கு இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் பொன்ராம் அடுத்ததாக விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் வைத்து தான் படம் இயக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடந்து வருகிறதாம் சிவகார்த்திகேயன் தனது திரை வாழ்க்கையில் முன்னணி நடிகர் என்ற இடத்தை பிடிக்க உதவியாக இருந்த இயக்குனர்களில் மிகவும் முக்கியமானவர் பொன்ராம் என்பது குறிப்பிடத்தக்கது .

செய்தியாளர்:R ராஜேஷ்குமார்

Related Posts