சினிமா செய்திகள்

ஓகே சொன்ன சூப்பர் ஸ்டார் கௌதம் மேனன் இயக்கத்தில் ரஜினிகாந்த்?

இயக்குனர் நடிகருமான கௌதம் மேனன் தன்னுடைய துருவ நட்சத்திரம் படத்தை வெளியிடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

கடந்த ஆறு ஆண்டுகளாக இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. ஆனால் தொடர்ந்து ஏற்படும் பண பிரச்சனையின் காரணமாக இப்படத்தை கௌதம் மேனனால் வெளியிட முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்துள்ளார் ஆனால் இப்படத்தின் முதன் முதலில் நடிக்கவிருந்தது சூர்யா தான் என்றும் சொல்லப்படுகிறது .ஆனால் இப்படத்தின் மீது சூர்யாவிற்கு சரியான உடன்பாடு இல்லாத காரணத்தினால் இப்படத்தில் அவர் நடிக்க மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது .

துருவ நட்சத்திரம் திரைப்படத்திலிருந்து விக்ரமிற்கு முன் சூர்யா நடிக்க இருந்தார் என்பது மட்டுமே இதுவரை தெரிந்த விஷயம் ஆனால் முதல் முறையாக இதுவரை பலரும் தெரியாத விஷயம் குறித்த கௌதம் மேனன் கூறியுள்ளார். தயாரிப்பாளர் கலைப்புலி Sதாணு கவுதமை அழைத்து ரஜினிகாந்திற்கு ஒரு நல்ல கதை இருந்தா சொல்லுங்க என கேட்டுள்ளார் அப்போது துருவ நட்சத்திரம் படத்தின் கதையை ரஜினிகாந்திடம் கூறியுள்ளார் கௌதம் மேனன். இப்படத்தின் கதையைக் கேட்டவுடன் ரஜினிக்கு பிடித்து விட்டதாம் படம் பண்ணலாம் என ஓகே  சொல்லிவிட்டாராம் சூப்பர் ஸ்டார்.

ஆனால் ரஜினி சார் இப்போது இந்த படம் பண்ணல கபாலி தான் பண்ண போறார் என தயாரிப்பாளர் கலைப்புலி தாணு கூறினார் என சமீபத்தில்   அளித்த பேட்டியில் கவுதம் மேனன் இவ்வாறு பேசினார் .

Related Posts