உலகமுழுவதும் ஓராண்டிற்கு மேலாக கொரோனாவின் கோரப்பிடியிலிருந்து வெளிவர முடியாமல் மக்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலையில் உலகம் முழுவதும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
மேலும் இந்தியாவில் இரண்டாவது அலை மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு உலக நாடுகளும் இந்தியாவிற்காக உதவிக்கரம் நீட்டியுள்ளது குறிப்பாக கனடாவில் 10 மில்லியன் டாலர் வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
மேலும் பல நாடுகளும் இந்தியாவிற்கு பயணத் தடை மற்றும் விமானப் போக்குவரத்திற்கு தடை விதித்துள்ளது. அதனால் வெளிநாட்டில் வாழும் இந்திய மக்கள் தங்கள் குடும்பம் எவ்வாறு இருக்கிறார்களோ,இந்த சூழ்நிலைகளில் உதவ முடியாமல் இருக்கின்றோமே என்று ஒவ்வொரு நாளும் வருந்துகின்றனர்.
ரவீன் முருகன் என்பவர் கனடாவில் நர்சாக பணியாற்றி வருகிறார். கடந்த புதன்கிழமை ரவீன் பணியில் இருந்த போது அவர் தாயிடம் இருந்து அழைப்பு வந்தது. ரவீனின் தாய் தொலைபேசி வழியாக ரவீனிடம் பேசினார் அப்போது தனக்கும் தந்தை இருவருக்குமே கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக தெரிவித்துள்ளார். இருவரும் கொரோனா தொற்று உறுதியான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ரவீன் முருகன் தந்தை தொலைபேசியில் உரையாடலின் போது மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டு பேசியுள்ளார். இதைக்கேட்டதும் ரவீன் முருகன் செய்வதறியாது உதவ முடியாத நிலையில் இருக்கிறோமே என்று வருந்தி உள்ளார்.