திருச்சி விமான நிலையத்திலிருந்து அக்டோபர் 29-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள குளிர்கால அட்டவணைப்படி, வாரத்துக்கு மேலும் 31 வெளிநாட்டு விமான சேவைகள் வழங்கப்படவுள்ளன. அதன்படி, திருச்சி விமானநிலையத்தில் இருந்து கோலாலம்பூருக்கு தினசரி சேவை 3-லிருந்து 5 ஆகவும், சிங்கப்பூருக்கு 4-லிருந்து 5 ஆகவும். இலங்கைக்கு 1-லிருந்து 2 ஆகவும், வியட்நாமுக்கு வாரத்துக்கு புதிதாக 3 சேவையும் என வாரத்துக்கு 31 விமான சேவைகள் கூடுதலாக இயக்கப்படவுள்ளான.
இதன் மூலம் திருச்சி விமானநிலையத்தில் இருந்து வழங்கப்படும் வெளிநாட்டு விமான சேவைகளின் எண்ணிக்கை வாரத்துக்கு 76-லிருந்து 107 ஆக அதிகரிக்கிறது.
திருச்சி விமானநிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு ஜூன் மாதத்தைக் காட்டிலும் ஜூலை மாதத்தில் பயணித்தவர்களின் எண்ணிக்கை 80.98 சதவீதம்(42,526 பேர்) அதிகரித்துள்ளது
இதேபோல, இலங்கைக்கு செல்லும் விமானத்தில் பயண இருக்கைக்கான டிக்கெட் கிடைக்காமல் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக இலங்கை வழியாக துபாய், சவுதி செல்லும் பயணிகள் பெரும் தவிப்புக்குள்ளாகின்றனர்.
இதேபோல மலேசியா செல்லும் பயணிகளும் டிக்கெட் கிடைக்க ஒரு வாரத்துக்கு காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதுபோன்ற பிரச்சினைகளுக்கு குளிர்கால அட்டவணை நடைமுறைக்கு வரும் பட்சத்தில் தீர்வு கிடைக்கும்.