திருச்சி விமான நிலையத்தில் இருந்து உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன இதுவரை இங்கு குறைவான அளவில் உள்ள பயணிகளை கொண்ட விமானங்கள் தான் இயக்கப்பட்டு வந்தன. எதிர்காலத்தில் போயிங் போன்ற 200-க்கும் அதிகமான பயணிகளுடன் பெரிய விமானங்களும் வந்து செல்லும் விதமாக திருச்சி விமான நிலையம் தற்போது நவீனமயமாக்கப்பட்டுள்ளது.
ரூபாய் 951 கோடி ரூபாயில் அதிநவீன வசதியுடன் புதிய முனையம் கட்டப்பட்டுள்ளது இந்த புதிய முனையம் மொத்தம் 134 ஏக்கரில் 75 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. இதில் நான்கு நுழைவாயில்கள் 12 வழி தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதே போல் பயணிகள் வெளியேற நான்கு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன அதில் 60 செக்கின் கவுண்டர்களும் உள்ளன .
தற்போது கட்டப்பட்டுள்ள இந்த புதிய விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் உள்நாட்டு பயணிகள் 1500 பேரையும் வெளிநாட்டு பயணிகள் 4000 பேரையும் கையாள முடியும் 750 கார்கள் நிறுத்தும் வகையில் கார் பார்க்கிங் வசதியும் அமைக்கப்பட்டுள்ளது .
தற்போது கட்டப்பட்டுள்ள இந்த புதிய விமான நிலையத்தை வரும் 2ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார் .