சிங்கப்பூரிலிருந்து திருச்சி சென்ற ஸ்கூட் விமானத்தில் சென்ற பயணி ஒரு கோடி மதிப்புள்ள தங்கம் கடத்தல்.
சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு தினமும் 3 முதல் 4 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பொதுவாக சிங்கப்பூரிலிருந்து வருபவர்கள் சிங்கப்பூரில் தங்கத்தின் விலை குறைவு என்பதால் தங்களுக்கு தேவையான தங்கத்தை வாங்கி வருவது வழக்கம் இருப்பினும் இந்தியாவின் சுங்கத்துறை அதிகாரிகள் தங்கம் ஏதும் கடத்தி வரப்படுகின்றனவா என தினமும் சோதனை இடுவது வழக்கம் .
வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்த சுங்கத்துறை அதிகாரிகள் பயணி ஒருவரை சோதனை செய்தனர் அவரது முட்டி பகுதியில் முட்டி வலிக்காக அணியப்பட்டிருக்கும் நீ கேப்பில் தங்கத்தை பேஸ்ட் வடிவில் மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த தங்கம் தற்போது பறிமுதல் செய்யப்பட்டு பயணியிடம் தீவிர விசாரணை செய்யப்பட்டு வருகிறது இந்த தங்கத்தின் மதிப்பு ஒரு கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது .