திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் சிங்கப்பூர் இலங்கை துபாய் மற்றும் மலேசியா போன்ற பல்வேறு சர்வதேச நாடுகளுக்கு விமான சேவை வழங்கி வருகிறது மேலும் அனைத்து நாட்டிற்கான சரக்கு விமான போக்குவரத்தையும் வழங்கி வருகிறது.
COvid 19நோய் தொற்றுக்குப் பிறகு சர்வதேச விமான போக்குவரத்தில் தற்போது தமிழக அளவில் அதிக அளவிலான வெளிநாட்டு பயணிகளை ஈர்த்து அவர்களுக்கான சேவையையும் திருச்சிராப்பள்ளி சர்வதே விமானநிலையம் வழங்கி வருகிறது .சமீபத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையம் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .
உலக தரத்தில் தரம் உயர்த்தப்பட்டுள்ள திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையம் நாளை முதல் செயல்பாட்டிற்கு வருகிறது சிங்கப்பூரிலிருந்து இண்டிகோ விமானம் நாளை திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையத்தில் தரையிறங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை காலை ஜூன் 11 6:00 மணி முதல் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையம் செயல்பாட்டிற்கு வருகிறது .