அக்டோபர் 23ஆம் தேதி ஆகிய இன்று உலகம் முழுவதும் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. குறிப்பாக இந்தியர்கள் அதிகம் வாழக்கூடிய சிங்கப்பூர் ,மலேசியா ,இலங்கை கனடா, லண்டன் ,போன்ற நாடுகளிலும் தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் அதே உற்சாகத்தோடு கொண்டாடப்பட்டு வருகிறது .
ஆயுத பூஜை பல்வேறு நாடுகளில் கொண்டாடப்பட்டாலும் சிங்கப்பூரில் கொண்டாடப்படும் ஆயுத பூஜைக்கு தனி மவுசு காரணம் கட்டுமான தொழிலாளர்கள் , ஓட்டுநர்கள் அதிகம் இருக்கக்கூடிய நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று .
குறிப்பாக சிங்கப்பூரில் பணிபுரியும் ஓட்டுநர்கள் மற்றும் சொந்தமாக வாகனம் வைத்து தொழில் செய்யக்கூடியவர்கள் தங்களின் வாகனத்திற்கு தமிழ்நாட்டை போலவே அலங்காரங்கள் செய்தும் மாலையிட்டும் சிங்கப்பூரில் ஆயுத பூஜையை சிறப்பாக கொண்டாடுவார்கள். அலங்காரம் செய்யப்பட்ட வாகனங்கள் சிங்கப்பூரின் முக்கிய பகுதி குறிப்பாக லிட்டில் இந்தியா பகுதிகளில் வாகனங்கள் அணிவகுப்பாக வரும்.
சிங்கப்பூரில் முன்பு தமிழர்கள் அதிகம் பணியாற்றக்கூடிய நிறுவனங்களில் மட்டுமே ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. தற்போது அனைத்து தரப்பினராலும் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. தாங்கள் பணி செய்வதற்கு உறுதுணையாக இருக்கும் அனைத்து ஆயுதங்களுக்கும் பூஜை இட்டும் மாலை அணிவித்தும் இந்த பூஜையை சிங்கப்பூரில் தமிழர்கள் மட்டுமல்லாது அனைவராலும் சிறப்பாக கொண்டாடபடுகிறது.
சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் பிரபல Toyah Construction &Engineering Pte Ltd நிறுவனத்தில் 250 பணியாளர்கள் கலந்து கொண்ட ஆயுத பூஜை சிறப்பாக நடைபெற்றது. அதே நிறுவனத்தில் 60க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கும் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது.
ஊழியர்கள் அனைவரும் ஒன்றாக சீருடைகள் நின்று ஆயுதங்களுக்கும் வாகனங்களுக்கும் பூஜை செய்த மாஸ் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பகிரப்பட்டு வருகிறது .