தமிழகத்தில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் தற்போது சிங்கப்பூர் மலேசியா துபாய் போன்ற நாடுகளுக்கு அதிக அளவில் விமான போக்குவரத்துத் தொடர்பு இருக்கக்கூடிய ஒரு சர்வதேச விமான நிலையமாக திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் திகழ்ந்து வருகிறது.
தற்போது திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தின் விரிவாக்க பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
அதிக அளவிலான பயணிகளை கையாளும் வசதி, 75000 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய பயணிகள் முனையம்,மல்டி லெவல் கார் பார்க்கிங் மற்றும் நகரத்திலிருந்து விமானநிலையம் வருததற்கான சாலை வசதிகள் என சர்வதேச தரத்தில் தயாராகி வருகிறது திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் .
சர்வதேச தரத்தில் தயாராகிவரும் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.