சிங்கப்பூர் செய்திகள்

திருச்சி -சிங்கப்பூர் இடையேயான விமான போக்குவரத்தில் புதிய சாதனை

திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் சிங்கப்பூர் மலேசியா குவைத் துபாய் போன்ற நாடுகளுக்கு சர்வதேச விமானங்கள் மட்டுமின்றி உள்நாட்டு விமான சேவையும் வழங்கி வரும் முக்கியமான விமான நிலையம் ஆகும்.

திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிற்கு சரக்கு விமானங்களும் இயக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் மற்றும் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையங்களுக்கு இடையே பயணிகள் போக்குவரத்தில் தற்போது புதிய சாதனை படைத்துள்ளது இதன்படி 83 சதவீத பயணிகள் போக்குவரத்து திருச்சி மற்றும் சிங்கப்பூர் இடையே 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் பயணிகள் போக்குவரத்து அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தியாவைப் பொறுத்த வரையில் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் சிங்கப்பூருக்கு அதிக விமானங்களை இயக்கும் இடத்தில் நான்காம் இடத்தை பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts