திருச்சி சர்வதேச விமான நிலையம் பயணி களை கையாளுவதில் ஜன.11-ம் தேதி புதிய உச்சத்தை எட்டியது.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து தற்போது கோலாலம்பூர், சிங்கப்பூர், கொழும்பு, சார்ஜா, துபாய், அபுதாபி, குவைத், தம்மாம், பாங்காக், மஸ்கட், தோஹா உள் ளிட்ட வெளிநாட்டு நகரங்களுக்கு சர்வதேச பயணிகள் விமானங்களும், சென்னை, மதுரை, மும்பை, பெங்களூரு, மங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு முக்கிய
நகரங்களுக்கு உன்நாட்டு விமானங்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, வாரந்தோறும் 103 வெனிநாட்டு விமாள சேவைகள், 77 உள்நாட்டு விமான சேவைகள் இயக்கப்படுகின்றன.
ஜன.11-ம் தேதி மட்டும் 5,424 வெளிநாட்டு பயணிகள், 1,959 உள்நாட்டு பயணிகள் என மொத்தம் 7,389 பயணிகளை கையாண்டு, திருச்சி விமானநிலையம் சாதனை படைத்துள்ளது.