இந்திய செய்திகள்

இனி இந்தியா செல்லும் விமான பயணிகளுக்கு RT-PCR Test தேவையில்லை !

இந்தியா செல்லும் சர்வதேச விமான பயணிகள் அனைவரும் தங்களுக்கு கொரோனா நோய் தொற்று இல்லை என்ற சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டிய நடைமுறை இருந்து வருகிறது .

இந்தியா செல்லக்கூடிய விமான பயணிகள் அனைவரும் தங்களுக்கு Covid 19 நோய் தொற்று இல்லை என்ற சான்றிதழை ஏர்சுவைதா இணையதளத்தில் பதிவேற்றுவதுடன் மட்டும் அல்லாமல் சுயவிவர விண்ணப்பத்தையும் பூர்த்தி செய்ய வேண்டிய நடைமுறை தற்போது உள்ளது .

13-02-2023 அன்று காலை 11 மணி முதல் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து நடைமுறைகளும் விலக்கிக் கொள்வதாக இந்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது .

அதன்படி 13-02-2023 முதல் இந்தியா செல்லக்கூடிய சர்வதேச விமான பயணிகள் அனைவருக்கும் RT-PCR Test மற்றும் ஏர் சுவைதா சுயவிவர விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் நடைமுறை விலக்கிக் கொள்ளப்படுகிறது .

மேலும் இந்தியாவில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் நோய் தொற்று கட்டுப்படுத்தும் வகையில் உத்தேசமான முறையில் நோய் தொற்று பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts