இந்திய செய்திகள்

திருச்சி சிங்கப்பூரிடையே விமான போக்குவரத்து மற்றும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் ஆனது இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு இயக்கப்படும் அதிக விமானங்களை இயக்கம் ஒரு சர்வதேச விமான நிலையம் ஆகும்.

திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் மலேசியா இலங்கை துபாய் சார்ஜா போன்ற நாடுகளுக்கு பயணிகள் விமானம் மற்றும் சரக்கு விமானங்களும் இயக்கப்பட்டு வருகிறது.

தற்போது சிங்கப்பூர் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திற்கு இடையேயான பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து அதிகரித்துள்ளது.

நவம்பர் மாத நிலவரப்படி சிங்கப்பூர் திருச்சி இடையேயான பயணிகளின் போக்குவரத்து 39,632 என கணக்கிடப்பட்டுள்ளது.

Related Posts