இந்திய செய்திகள்

திருவாரூர் ஆழி தேரோட்டம் ஆன்மீக வெள்ளத்தில் திருவாரூர்!

சைவ சமய தலைமை பீடங்களில் முதன்மையான உலகப்புகழ் பெற்ற திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயில். பங்குனி உத்திரப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆழி தேரோட்டம் இன்று காலை வெகு விமர்சையாக தொடங்கியது .

இந்தத் திருவிழாவை காண்பதற்காக தமிழகத்திலிருந்து பல்வேறு மாவட்டங்களிலும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்தனர். ஆரூரா தியாகேசா என பக்தர்கள் முழக்கமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர் இதற்கு முன்னதாக காலை 5 மணிக்கு விநாயகர் தேர் 5.30 மணிஅளவில் சுப்பிரமணிய தேர் அதனை தொடர்ந்து ஆதி தேரோட்டம் நடைபெற்று வருகிறது .

இந்த தேரோட்டத் திருவிழாவிற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் 2000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் நான்கு வீதிகளிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் 10 தனிப்படை அமைக்கப்பட்டு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .

திருவாரூர் ஆழி தேரோட்டத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் :துரை .க.துரையரசன்

Related Posts