இந்திய செய்திகள்

திருத்துறைப்பூண்டியில் புத்தகத் திருவிழா!

நவ:3 திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் செயல்பட்டு வரும் புனித தெரசாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நவம்பர் 3ஆம் தேதி புத்தகத் திருவிழா நடைபெற்றது.

நடைபெற்ற புத்தகத் திருவிழாவினை பாரதி புத்தகாலயம் கிருஷ்ணா புத்தக நிலையம் மற்றும் புனித தெரசா பெண்கள் மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்தினர்.

மாணவர்களுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் இந்த கண்காட்சியில் இடம்பெற்றன. பள்ளி மாணவர்களுக்கு வாசிப்பு திறனை மேம்படுத்தும் வகையில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தேவையான புத்தகங்களை பரிந்துரை செய்தனர்.

இந்த நிகழ்வில் 5000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் சுமார் 70 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் புத்தக நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

தேர்விற்கு தேவையான புத்தகங்கள் பிரபல ஆசிரியர்களின் புத்தகங்களை படித்ததிலும் வாங்கியதிலும் மிகுந்த மகிழ்ச்சி என மாணவர்கள் தெரிவித்தனர்.

Related Posts