இந்திய செய்திகள்

பாஜகவினர் திருத்துறைப்பூண்டியில் சாலை மறியல்!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பாரதிய ஜனதா கட்சியினர் சுமார் 100க்கும் மேற்பட்டோர் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர் .

தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநில பொதுச் செயலாளர் திரு. கருப்பு முருகானந்தம் அவர்களின் கைதை கண்டித்து இந்த சாலை மறியல் நடைபெற்றது. சாலை மறியல் காரணமாக திருத்துறைப்பூண்டி வேதாரணியம் தஞ்சை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் காலதாமதமாக சென்றன.

சாலை மறியலில் தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் திரு.கோட்டூர் ராகவன் ,திருவாரூர் மாவட்ட OBCஅணி துணைத் தலைவர் திரு. மாரி பிரபு ,திருத்துறைப்பூண்டி நகர தலைவர் Pvk.ஐயப்பன் மற்றும் மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .

திருத்துறைப்பூண்டி பாஜக ஒன்றிய தலைவர் திரு. ராஜ பூபதி தலைமையில் நடைபெற்ற இந்த சாலை மறியலில் விடுதலை சிறுத்தை கட்சியை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது .

முன்னதாக தஞ்சையில் பாஜக மாநில பொதுச் செயலாளர் திரு. கருப்பு முருகானந்தம் சாலை மறியலில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டார் .இந்த கைது தொடர்பாகவே இந்த சாலை மறியல் நடைபெற்றதாக பாஜக ஒன்றிய தலைவர் திரு. ராஜ பூபதி தெரிவித்தார் .

திருத்துறைப்பூண்டியில் சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Posts