ஜூலை 13: திருத்துறைப்பூண்டியில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த 80க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருத்துறைப்பூண்டி பாஜக சட்டமன்றத் தொகுதி இளைஞரணி மற்றும் ஓபிசி அணி சார்பில் சார்பில் இந்திய தேசியக்கொடி அணிவகுப்பிற்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது . காவல்துறை இந்த அணி வகுப்பிற்கு அனுமதி அளிக்காத நிலையில் தடையை மீறி திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வேலூர் பகுதியில் இருந்து பாஜகவினர் சுமார் 80க்கும் மேற்பட்டோர் தேசியக்கொடி அணிவகுப்பு நடத்த முயன்றனர். அப்போது காவல்துறை அவர்களை கைது செய்தது.
திருவாரூர் மாவட்ட பாஜக மேலிடப் பார்வையாளர் திரு. பேட்டை சிவா, பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கோட்டூர் ராகவன் ,மாவட்ட பொது செயலாளர் விகே செல்வம் திருத்துறைப்பூண்டி ஒன்றிய பாஜக தலைவர் ராஜபூபதி நகரத் துணைத் தலைவர் வசந்த், முன்னாள் நகரத் துணைத் தலைவர் பாலாஜி,ராஜீவ் காந்தி OBCஅணி,மாரிபிரபு OBC அணி,ரகுமாரன் இளைஞரணி, ரவிவர்மன் இளைஞரணி. ஆகியோர் உட்பட 80க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர் .