இந்திய செய்திகள்

பாஜக- கருப்பு முருகானந்தம் தொடர் முயற்சியில் பயணத்தை தொடங்கியது திருத்துறைப்பூண்டி அகஸ்தியன்பள்ளி ரயில் .

ஏப்ரல் 8:தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழகம் வருகை தந்த பாரத பிரதமர். இன்று சென்னை கோவை அதிவேக வந்தே பாரத் ரயில் திட்டத்தை கொடியசைத்து சென்னையில் துவைக்கி வைத்தார் .

சென்னையில் உள்ள ராமகிருஷ்ணா மடத்தின் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற திரு. நரேந்திர மோடி அவர்கள் திருவள்ளுவரின் திருக்குறளை மேற்கோள் காட்டி உரையாற்றினார் .

திருத்துறைப்பூண்டி -அகஸ்தியன்பள்ளி ரயில் போக்குவரத்தை காணொளி காட்சி மூலம் இன்று துவைக்கி வைத்தார் பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள்.

திருத்துறைப்பூண்டி ரயில்வே சந்திப்பில் திரண்டிருந்த பாஜகவினர் .

டெல்டா மாவட்டங்களில் ரயில்வே திட்ட பணிகள் விரைவில் துவங்குவதற்காக .பாஜக மாநில பொதுச் செயலாளர் திரு. கருப்பு முருகானந்தம் அவர்கள் இந்திய ரயில்வே துறை அமைச்ர் திரு.அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை சந்தித்து வலியுறுத்தினார், இதன்படி அவரின் கோரிக்கை ஏற்கப்பட்டு தாம்பரம்- செங்கோட்டை ரயில் முத்துப்பேட்டை நிலையத்தில் நின்று செல்வது. மற்றும் திருத்துறைப்பூண்டி அகஸ்தியம்பள்ளி பயணிகள் ரயில் சேவை போன்றவற்றை இன்று பாரதப் பிரதமர் மற்றும் இந்திய ரயில்வே துறை அமைச்சர் துவைக்கி வைத்தனர் .

டெல்லியில் இந்திய ரயில்வே துறை அமைச்சரை சந்தித்து டெல்டா மாவட்டங்களின் ரயில்வே திட்டங்களை விரைவில் நிறைவேற்ற கோரிக்கை வைத்த பாஜக மாநில பொதுச் செயலாளர் திரு. கருப்பு முருகானந்தம்

திருத்துறைப்பூண்டி ரயில் நிலைய சந்திப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக திருத்துறைப்பூண்டி ஒன்றிய தலைவர் வடபாதி திரு. MR.பூபதி மற்றும் நகர தலைவர் திரு.Pvk.அய்யப்பன் தலைமையில் ஏராளமான பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மேலும் பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கிய பாஜகவினர் அதே ரயிலில் அகஸ்தியன் பள்ளி வரை பயணித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பயணத்தை துவங்கிய திருத்துறைப்பூண்டி அகஸ்தியன்பள்ளி ரயில் வண்டி

திருத்துறைப்பூண்டி -அகஸ்தியம்பள்ளி ரயில் திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.294 கோடி ஆகும். மொத்தம் 37 கிலோமீட்டர் ரயில் பாதையை உள்ளடக்கியது இந்த ரயில்வே திட்டம். நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்கும் வண்ணமும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

Related Posts