இந்திய செய்திகள்

சிங்கப்பூர் தமிழர்களுக்காக குறைந்த விலையில் திருச்சிக்கு புதிய விமான சேவை!

சிங்கப்பூரில் தமிழர்கள் அதிகம் பணியாற்றி வருகின்றனர். சிங்கப்பூரில் பணியாற்றும் தொழிலாளர்கள் குறிப்பிட்ட சதவீதம் பேர் டெல்டா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தஞ்சை, நாகை ,திருவாரூர், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இவர்களுக்கான சர்வதேச விமான நிலையமாக திகழ்கிறது திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம்.

திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு தற்போது விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த சேவைகளில் அக்டோபர் மாதம் கூடுதல் விமான சேவைகள் இயக்குவதற்கான வாய்ப்புகளும் உள்ளன .தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்கள் திருச்சியை மிகுந்த குறைந்த கட்டணத்தில் வந்த அடைவதற்கு புதிய விமான சேவை வழங்க உள்ளது Viet Jet நிறுவனம்.

Advertisement

திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கும், சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கும் வியட்நாமின் கோச்சிமின் Ho Chi Min சிட்டி வழியாக விமானம் இயக்கப்பட உள்ளது .கோச்சிமின் சிட்டியில் 2 மணி நேரம் காத்திருப்புடன் குறைந்த கட்டணத்தில் சிங்கப்பூர் மற்றும் திருச்சி சென்றடையலாம் .

Related Posts