இந்திய செய்திகள்

திருச்சி சிங்கப்பூர் இடையே புதிய விமானம் இயக்கப்பட உள்ளது!

தமிழ்நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் ஒன்றுதான் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம். இந்த விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் மலேசியா தோகா துபாய் என பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது .

இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூருக்கு அதிகளவில் விமானங்களை இயக்கும் விமான நிலையமும் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம்தான் .

திருச்சிராப்பள்ளி சிங்கப்பூர் இடையே ஏற்கனவே தனது சேவையை செய்து வருகிறது ஸ்கூட் விமான நிறுவனம். இதனிடையே புதிய ரக விமானம் ஒன்றை அக்டோபர் 30-ஆம் தேதி முதல் திருச்சி சிங்கப்பூர் இடையே இயக்க உள்ளது.

A321 Neo ரக ஏர்பஸ் விமானத்தை திருச்சி சிங்கப்பூரிடையே இயக்க உள்ளது இந்த விமானம் மொத்தம் 236 இருக்கைகள் கொண்டதாகும் .

Related Posts