இந்திய செய்திகள்

திருச்சிராப்பள்ளி சிங்கப்பூர் இடையே கூடுதல் விமானங்கள்!

தமிழகத்தில் உள்ள முக்கிய விமான நிலையங்களில் ஒன்றுதான் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம். இந்த விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் மலேசியா துபாய் போன்ற நாடுகளுக்கு சர்வதேச விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

கொரோனா நோய் தொற்று காலங்களில் இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளுக்கு அதிக அளவில் சர்வதேச விமானங்களை இயக்கியதும் இந்த விமான நிலையம்தான் .

தற்போது சிங்கப்பூர் திருச்சிராப்பள்ளியிடையே விமான போக்குவரத்து தற்போது அதிகரித்துள்ளது .எந்த வகையில் அதிகரித்துள்ளது என்றால் நோய் தொற்று காலத்திற்கு முன்பு எப்படி விமான சேவை இருந்ததோ அதேபோன்று விமான சேவை தற்போது துவங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்,ஸ்கூட்,மற்றும் இண்டிகோ விமான நிறுவனங்கள் தினசரி விமான சேவையினை சிங்கப்பூர் மற்றும் திருச்சிராப்பள்ளி இடையே இயக்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts