இந்திய செய்திகள்

தமிழ்நாட்டின் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க்கிறது சிங்கப்பூர் !

இந்தியாவின் தமிழ்நாட்டில் ஜனவரி 2024 ஆம் ஆண்டு சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது இந்த மாநாட்டிற்கு சர்வதேச நாடுகளின் தலைவர்கள் அங்குள்ள தொழில் முனைவோர் மற்றும் தொழிலதிபர்களை சந்தித்து தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் மற்றும் தொழில் துறை அமைச்சர் டி .ஆர் பி .ராஜா அவர்கள் அழைப்பு விடுத்தனர் .

தமிழக முதல்வர் திரு முக .ஸ்டாலின் அவர்கள் சிங்கப்பூர் சென்ற போது சிங்கப்பூர் தமிழ் அமைப்புகள் அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர் அந்த வரவேற்பு நிகழ்ச்சியில் 3000 மேற்பட்ட தமிழர்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் தொழில்துறை அமைச்சர் டி. ஆர். பி. ராஜா அவர்களை சிங்கப்பூருக்கான தூதரக உயர் அதிகாரி சந்தித்து தமிழ்நாட்டில் நடைபெறும் சர்வதேச தொழில் முதலீட்டு மாநாட்டில் கலந்து கொள்வதாக தெரிவித்தார் .

சிங்கப்பூரின் சிறந்த தொழில் முதலீடுகளை தமிழ்நாட்டில் அமைப்பதற்கு தமிழகத் தொழில் துறை அமைச்சர் மற்றும் அமைச்சகத்துடன் தொடர்ந்து இணைந்து செயல்படுவோம் என சிங்கப்பூர் தூதராக உயர் அதிகாரி தெரிவித்தார்.

Related Posts