சிங்கப்பூரின் கல்வி துறை என்பது சர்வதேச அளவில் முதன்மைப் பெற்றுள்ளது. இந்தியர்கள் வெளிநாட்டில் படிப்பதற்கு அதிக அளவான வாய்ப்பை சிங்கப்பூர் நாடு ஏற்படுத்தி தந்துள்ளது.
மாணவர் விசா அதாவது ஸ்டூடன்ட் பாஸ் என்று அழைக்கப்படுகிறது இதன் மூலம் மட்டுமே சிங்கப்பூரில் படிப்பினை தொடர முடியும்.
நீங்கள் பயில விரும்பும் பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிறுவனங்களிடம் இருந்து முறையான எழுத்துப்பூர்வமான அழைப்பை பெற வேண்டும் .பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிறுவனங்களிடமிருந்து பெற்ற முறையான அழைப்பை கொண்டு மாணவர் விசா விண்ணப்பிக்கலாம் .
நீங்கள் பயில விரும்பும் படிப்புகளை கொண்டே கால நிர்ணயம் செய்யப்படுகிறது. எடுத்துக்காட்டாக டிப்ளோமா மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு மூன்று மாதம் முதல் ஆறு மாதம் வரை தேவைப்படும் படிப்புகளுக்கு குறைந்த கால அனுமதி மாணவர் விசா போதுமானது.
மேலும் இளங்கலை மற்றும் முதுகலை படிப்பை நீங்கள் தேர்வு செய்தால் நீண்ட கால மாணவர் விசா உங்களுக்கு தேவைப்படும்.
சிங்கப்பூர் பட்டய படிப்புகள், டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள், தொழிற்கல்வி படிப்புகள் சர்வதேச மாணவர்களுக்கான நடைமுறை பயிற்சி படிப்புகள் மற்றும் இளங்கலை, முதுகலை படிப்புகளை நீங்கள் சிங்கப்பூரில் பயிலலாம் .
சிங்கப்பூரில் உள்ள பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிறுவனங்களின் இணையதளத்திற்கு சென்று உங்களுக்கு விருப்பமான படிப்புகளை தேர்வு செய்து நீங்கள் விண்ணப்பித்து சிங்கப்பூரில் பயிலலாம்.