சிங்கப்பூர் செய்திகள்

இந்தியா கோரமண்டல் ரயில் விபத்து சிங்கப்பூர் பிரதமர் இரங்கல் கடிதம்.

இந்தியாவின் ஒடிசாவில் நடைபெற்ற மூன்று ரயில் விபத்தில் சுமார் 294 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து உலக தலைவர்கள் பல்வேறு தரப்பினரும் இந்திய பிரதமருக்கு கடிதம் மூலம் தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர் .

சிங்கப்பூர் பிரதமர் திரு. லீசியன்லுங்அவர்கள் இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு .

அன்புள்ள பிரதமர் மோடி,

2 ஜூன் 2023 அன்று ஒடிசாவின் பாலசோரில் நடந்த பயங்கர ரயில் விபத்தை பற்றி அறிந்து நான் மிகுந்த வருத்தம் அடைகிறேன்.

சிங்கப்பூர் அரசின் சார்பில் உங்களுக்கும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் எண்ணங்கள் உங்களிடமும் இந்திய மக்களிடமும் உள்ளன.

தங்கள் உண்மையுள்ள

லீ சியென் லூங் சிங்கப்பூர் குடியரசு

என சிங்கப்பூர் பிரதமர் இந்திய பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts