சிங்கப்பூரில் உள்ள முக்கிய வர்த்தக மையமாக கருதப்படுவது லிட்டில் இந்தியா அதாவது தேக்கா பகுதி .தேக்கா பகுதியில் அமைந்திருக்கும் மிக முக்கியமான வணிக மற்றும் வர்த்தக மையமாக கருதப்படுவது முஸ்தபா சென்டர் .
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக முஸ்தபா சென்டர் காலையில் முதல் அதிகாலை 2 மணி மணி வரை மட்டுமே இயங்குகிறது.
நோய் தொற்று பரவல் காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போது 24 மணி நேர சேவையை குறைத்தது முஸ்தபா நிறுவனம் .
தற்போது மீண்டும் 24 மணி நேர சேவையை வழங்குகிறது முஸ்தபா சென்டர். செப்டம்பர் ஆறாம் தேதி முதல் முஸ்தபா சென்டர் 24 மணி நேர சேவையை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .