சிங்கப்பூரில் பணிபுரியும் தமிழர்களே நமக்கு பொருளாதாரமும் நம்முடைய கனவுகளும் மிக முக்கியம் தான் அதைவிட முக்கியம் நம் உயிரும் நமது பாதுகாப்பும் குடும்பமும் என்பதை மறந்து விடாதீர்கள்.
சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் அங்கு பணிபுரியும் தமிழர்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டு ஊழியர்களின் பணியிடங்களின் பாதுகாப்பை உறுதி செய்துதான் வருகிறது. இருப்பினும் பல்வேறு உயிரிழப்புகள் அதாவது வேலை இட மரணங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன .
தமிழ்நாட்டில் இருந்து நாம் சிங்கப்பூர் சென்று சம்பாதிப்பது நமது அடிப்படை பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ள மட்டும்தான் உணவில்லாமலோ உணவு பஞ்சத்தின் காரணமாகவோ நாம் வெளிநாடுகளில் பணிபுரிவதில்லை .நாம் பணிபுரியும் இடத்தில் நமது பாதுகாப்பை அந்த நிறுவனங்கள் உறுதி செய்கிறதோ இல்லையோ நாம் கண்டிப்பாக உறுதி செய்ய வேண்டும் .நம் வீட்டிற்கும் நம் குடும்பத்திற்கும் நாம்தான் ஆலமரம் என்பதை என்றும் மறந்து விடாதீர்கள்.
ஒரு குடும்பத்தின் மூத்த மகன் அல்லது குடும்பத்தில் ஒருவர் இழந்துவிட்டால் அதாவது உயிரிழந்து விட்டால் அவர்களுக்கு எவ்வளவு தொகை கொடுத்தாலும் அதனை ஈடு செய்ய முடியாது. நம் குடும்பத்தை நாம் தான் பாதுகாக்க வேண்டும் அடிப்படை பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக வெளிநாடு பணிக்கு செல்லும் நாம் நம் உயிரை எக்காரணத்தைக் கொண்டும் இழந்து விடக்கூடாது .நமது பாதுகாப்பை நாமே உறுதி செய்வோம் பாதுகாப்புடன் பயணிப்போம் பாதுகாப்புடன் பணிபுரிவோம்.