சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரில் லாரி பஸ் மோதல் இருவர் மருத்துவமனையில் அனுமதி.

சிங்கப்பூர் :லோயாங் அவென்யூ மற்றும் பாசிர் ரிஸ் டிரைவ் 1 சந்திப்புக்கு அருகில் சாலை  விபத்து

இன்று (மே 30) காலை சுமார் 9:30 மணியளவில், SCDF சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படைக்கு மேற்கூறிய இடத்தில் சாலை விபத்துக்கான அழைப்பு வந்தது.

இரண்டு பேருந்துகளும் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சாங்கி தீயணைப்பு நிலையம் மற்றும் டேம்பைன்ஸ் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர்

SCDF வந்தவுடன், ஒரு பேருந்து ஓட்டுநர் பேருந்தின் ஓட்டுநர் இருக்கையில் சிக்கிக் கொண்டார்.

மீட்பு நடவடிக்கையின் போது, பஸ் டிரைவரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஒரு தீயணைப்பு வீரர் பஸ்சுக்குள் சென்றார் .  பேருந்து மற்றும் லாரி ஓட்டுநர்கள் மீட்கப்பட்டனர்.

SCDF வருவதற்கு முன்பே இரண்டு பேருந்துகளில் இருந்தும் சுமார் 40 பயணிகள் வெளியேறிவிட்டனர்.

சிக்கிய பஸ் டிரைவர் மற்றும் லாரி டிரைவர் இருவரும் சாங்கி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Related Posts