சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரில் நாளை இந்திய தேசிய கொடியேற்றப்படுகிறது!

சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் இந்திய தூதரகம் ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தின விழாவினை கொண்டாட அழைப்பு விடுத்துள்ளது.

சிங்கப்பூரில் இருக்கும் இந்தியர்களுக்கு தேவையான அலுவல் ரீதியான பணிகள் மற்றும் குடியுரிமை ரீதியான பணிகளுக்காக சிங்கப்பூர் இந்திய தூதரகம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் சார்பில் செயல்பட்டு வருகிறது.

நாளை ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்திய சுதந்திர தின விழா இந்தியாவில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது அதேபோல் வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரக அலுவலகங்களில் மூவர்ணக் கொடி ஏற்றத்துடன் இந்திய சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட இருப்பதால் சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் இந்திய தூதரகமும் சிங்கப்பூரில் உள்ள இந்தியர்களுக்கும்  சுதந்திர தின விழாவை கொண்டாட அழைப்பு விடுத்துள்ளது .

Related Posts