சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான சுற்றுலா!

சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பு ஹெல்த்சர்வ். இந்த அமைப்பு புலம் பெயர்ந்த ஊழியர்கள் அதாவது வெளிநாட்டு ஊழியர்களுக்கு தேவையான சுகாதாரம் மற்றும் மனநலம் சார்ந்த அனைத்து சேவைகளையும் வழங்கி வருகிறது .

இந்த தன்னார்வமைப்பு கடந்த வாரம் வெளிநாட்டு ஊழியர்களை கார்டன்ஸ் பை தி பேக்கு ஒரு சுற்றுலா அழைத்துச் சென்றது .

இந்த சுற்றுலாவில் வெளிநாட்டு ஊழியர்கள் கலந்து கொண்டனர். கம்பீரமான நீர் நீர்வீழ்ச்சி முதல் தாமரைக் குளம் வரை அனைத்து இயற்கை அழகழையும் கண்டு ரசித்த வெளிநாட்டு ஊழியர்கள் இந்த சுற்றுலா மனதிற்கு மிகவும் புத்துணர்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர் .

Related Posts