சிங்கப்பூர் – பாதசாரிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் முயற்சியில் 200 கி.மீட்டருக்கும் அதிகமான சைக்கிள் ஓட்டும் பாதைகளுக்கு அடுத்ததாக அமைந்துள்ள நடைபாதைகள் பாதசாரிகள் மட்டுமே செல்லும் பாதையாக மாற்றப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம், தற்போது நடைபாதைகளில் அனுமதிக்கப்படும் கிக் ஸ்கூட்டர்கள் போன்ற மிதிவண்டிகள் மற்றும் மோட்டார் பொருத்தப்படாத தனிநபர் இயக்கம் சாதனங்கள் (பிஎம்டி) பாதசாரிகள் மட்டுமே செல்லும் பாதைகளில் இருந்து தடை செய்யப்படும் என்று LTA ஆகஸ்ட் 14 அன்று தெரிவித்துள்ளது.
சைக்கிள் ஓட்டுபவர்களுக்கும், மோட்டார் பொருத்தப்படாத PMD-களைப் பயன்படுத்துபவர்களுக்கும் புதிய விதி , ஜூலை 1, 2025 முதல் அமலாக்கம் தொடங்கும். புதிய விதியை மீறுபவர்களுக்கு $2,000 வரை அபராதம் அல்லது மூன்று மாதங்கள் சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்
இயந்திர சக்கர நாற்காலிகளுக்கு இது பொருந்தாது.