சீனாவின் சிறந்த உணவகமாக தமிழரின் உணவகம் ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சீனாவின் குவாங்டாங் மாநிலத்தின் குவாங்சோ நகரில் செயல்பட்டு வருகிறது ரங்கோலி என்ற இந்திய உணவகம். இந்த உணவகத்தில் வட இந்திய உணவுகள் தென்னிந்திய உணவுகள் சீன உணவுகள் என அனைத்து உணவுகளும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன .
மக்களால் தேர்வு செய்யப்படும் இந்த விருது நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. Thats Food And Drink Awards என்ற பெயரில் இந்த விருது வருடா வருடம் வழங்கப்படுகிறது இந்த வருடம் குவாங்சோ நகர் பேன்யூ பகுதியில் செயல்பட்டு வரும் ரங்கோலி இந்திய உணவு பான நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
மக்களின் விருப்பம், சுவை, சுகாதாரம் ,உணவக இருப்பிட வசதி என அனைத்தையும் இந்த விருது வழங்கும் போது கருத்தில் எடுத்துக் கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விருதினை ரங்கோலி இந்திய உணவு பான நிறுவனத்தின் இயக்குனர் திரு. சசிகுமார் பெற்றுக்கொண்டார்.