இந்திய செய்திகள்

பிரதமரை வரவேற்க சென்னையில் குவிந்த பாஜகவினர்! !

தமிழகம்: சென்னை மாமல்லபுரத்தில் சர்வதேச அளவிலான செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று முதல் துவங்குகிறது .சர்வதேச நாடுகளில் இருந்து செஸ் வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்கின்றனர் .

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியினை துவக்கி வைக்க இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆகாய மார்க்கமாக சென்னை விமான நிலையத்திற்கு இன்று வருகை தந்தார்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து நிகழ்ச்சி துவக்க விழா நடைபெறும் நேரு உள்விளையாட்டு அரங்கம் வரையில் சாலையின் இரு மருங்கிலும் பாஜக தொண்டர்கள் வழிநெடுகிலும் மலர்களைத் தூவியும் மோடி மோடி என்று கோஷமிடும் பாரத பிரதமரை வரவேற்றனர் .

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பாஜகவினர் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். நாளை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் பங்கேற்கிறார் .

Related Posts