இந்திய செய்திகள்

சிங்கப்பூரிலிருந்து இந்தியா செல்பவர்களுக்கு covid-19 நெகட்டிவ் சான்றிதழ் அவசியம் !

கொரோனா பரவல் காரணமாக, சீனா, சிங்கப்பூர், ஹாங்காங், கொரியா, தாய்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் விமான பயணிகள், புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்வது அவசியம். இந்தியாவுக்கு வரும்போது நெகடிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை உத்தரவு. இந்த நடைமுறை வரும் ஜனவரி 1, 2023 முதல் அமலுக்கு வருகிறது.

மேலும் இந்தியாவிற்கு வருகை தரும் 2 சதவீத சர்வதேச விமான பயணிகளுக்கு உத்தேச அடிப்படையில் பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானம் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பாக எடுக்கப்பட்ட Covid 19நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் .

விமான பயணிகள் தங்களின் நெகட்டிவ் சான்றிதழ்களை ஏர்சுவிதா AIR SUVIDHA இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதோடு சுயவிவர படிவத்தையும் பூர்த்தி செய்ய வேண்டும்.

விமானங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கான அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்படுவதோடு பயணிகள் கட்டாயம் முககவசமும் அணிந்திருக்க வேண்டும் .

Related Posts