இந்திய செய்திகள்

சிங்கப்பூரில் இந்திய குடியரசு தின கொண்டாட்டம்!

சிங்கப்பூரில் செய்யப்பட்டு வரும் இந்திய தூதரகத்தின் சார்பில் இந்திய 74வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டது.

சிங்கப்பூர் இந்திய தூதரகத்தில் இன்று காலை 9 மணி அளவில் இந்திய மூவர்ண கொடியினை ஏற்றி வைத்தார் சிங்கப்பூர் இந்திய தூதரக உயர் அதிகாரி திரு. பெரியசாமி குமரன் அவர்கள்

இந்திய தேசியக் கொடியினை ஏற்றி வைத்து சிங்கப்பூர் இந்திய தூதரக உயர் அதிகாரி அவர்கள் இந்திய ஜனாதிபதி உறையினை வாசித்தார் நிகழ்வில் தேசிய கீதம் பாடப்பட்டது மட்டும் அல்லாமல் இந்திய ஒருமைப்பாடு மற்றும் பண்பாடு விளக்கும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

நடைபெற்ற இந்திய குடியரசு தின விழாவில் இந்திய வெளியுறவுத் துறையைச் சார்ந்த அதிகாரிகள் மற்றும் சிங்கப்பூர் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Related Posts