சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் இந்திய தூதரகத்தின் சார்பில் ஜனவரி 26 காலை 8:30 மணி அளவில் இந்திய தேசியக்கொடி ஏற்றப்பட்டது .

இந்தியாவின் 76 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு உலகம் எங்கும் உள்ள இந்திய தூதரகங்களில் இந்திய தேசிய கொடி ஏற்றப்பட்டு ஜனாதிபதி உரை வாசிக்கப்பட்டது.

சிங்கப்பூர் கிரான்ச்சி பகுதியில் செயல்பட்டு வரும் இந்திய தூதரகத்தின் சார்பில் இந்திய தேசியக்கொடி ஏற்றப்பட்டு இந்திய பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான சிங்கப்பூரர்கள் மற்றும் இந்தியர்கள் ,இந்தியாவில் இருந்து சிங்கப்பூரில் பணிபுரியும் ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர் .