தமிழகத்தில் செயல்பட்டு வரும் சர்வதேச விமான நிலையங்களில் சிங்கப்பூருக்கு அதிக விமான சேவைகளை வழங்கும் விமான நிலையமாக திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் திகழ்ந்து வருகிறது.
பயணிகள் விமான போக்குவரத்து தவிர சரக்கு விமான போக்குவரத்திற்கும் தமிழகத்தில் மிக முக்கிய இடத்தை வகிக்கிறது திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் .
வருடத்திற்கு 2 மில்லியன் பயணிகளை கையாளும் விமான நிலையங்களின் வரிசையில். சிறந்த விமான நிலையமாக தேர்வாகியுள்ளது திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம்.
இதற்கான விருதினை ACI ஏர்போர்ட் கவுன்சில் இன்டர்நேஷனல் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.